search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சரை சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கிய போத்தீஸ் பட்டு ஆலயத்தின் நிர்வாக இயக்குநர்.
    X
    முதலமைச்சரை சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கிய போத்தீஸ் பட்டு ஆலயத்தின் நிர்வாக இயக்குநர்.

    கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சரிடம் ரூ.1 கோடி வழங்கிய போத்தீஸ் பட்டு நிறுவனம்

    போத்தீஸ் பட்டு ஆலயத்தின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.
    சென்னை: 

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த இரண்டு வார காலமாக தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    இதற்கிடையில், பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று பல்வேறு தரப்பினரும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இந்நிலையில், போத்தீஸ் பட்டு ஆலயத்தின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி  வழங்கப்பட்டுள்ளது. 

    சென்னை தலைமைச்செயலகத்தில் போத்தீஸ் பட்டு ஆலயத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் போத்தி அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். 
    Next Story
    ×