search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    பிளஸ்-2 தேர்வு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கருத்து கேட்ட அமைச்சர்

    பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு  கருத்து கேட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதையடுத்து பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, பா.ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாலாஜி உட்பட 13 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.


    இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் தொலைபேசியில் பேசி அவரது கருத்துக்களை கேட்டறிந்துள்ளார்.
    Next Story
    ×