search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    தொண்டரிடம் சசிகலா பேசிய மற்றொரு ஆடியோ வெளியானது

    உங்களைப்போன்று இளைஞர்களை நான் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன். உங்களிடம் தான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
    சென்னை:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்று திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக' திடீரென அறிவித்தார். இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது.

    அதிமுக

    இந்த சூழ்நிலையில் சசிகலா தொண்டர்களிடம் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    கிஷோர் என்ற தொண்டரிடம், சசிகலா பேசிய ஆடியோ நேற்று வெளியாகியுள்ளது. அதன் உரையாடல் வருமாறு:-

    தொண்டர்:- நன்றாக இருக்கிறீர்களா அம்மா?

    சசிகலா:- நன்றாக இருக்கிறேன். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?

    தொண்டர்:- நீங்கள் அரசியலுக்கு வராதது ரொம்ப வருத்தம் தரும் வகையில் இருக்கிறது. சென்னைக்கு வந்திருந்தபோது, உங்களை பக்கத்தில் பார்த்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. நீங்கள் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் அம்மா..

    சசிகலா:- சரி, சரி வருகிறேன். நீங்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டீர்களா?

    தொண்டர்:- ஆம். இப்பதான் முடித்திருக்கிறேன். எனக்கு அரசியலில் ஆர்வம் அதிகம். ஜெயலலிதாவின் திட்டங்களும், அவருடைய துணிவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.


    தொண்டர்:- எனக்கு உங்களை நேரில் பார்க்கவேண்டும்.

    சசிகலா:- நிச்சயமாக. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் பார்ப்பேன்.

    தொண்டர்:- இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுக்க, நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். உங்களிடம் இருந்து நாங்களும், அரசியல் கற்றுக்கொள்வோம்.

    சசிகலா:- நிச்சயம் வருவேன். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். வந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். அதனால் ஒன்னும் கவலைப்படாதீங்க, வந்துருவேன். உங்களைப்போன்று இளைஞர்களை நான் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன். உங்களிடம் தான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதை நல்ல முறையில் அரசியலில் பயன்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.

    தொண்டர்:- உங்களிடம் இருந்து தொலைபேசி வந்தது ஆச்சரியத்தை தருவதாக இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.

    சசிகலா:- சரிப்பா.

    இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது.
    Next Story
    ×