search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    திருச்சி, துறையூர், துவரங்குறிச்சியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

    தா.பேட்டை பகுதிகளில் நேற்று முன்தினம் வெயில் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
    துறையூர்:

    திருச்சி, துறையூர், துவரங்குறிச்சி, தா.பேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை அதிக வெப்ப சலனம் காணப்பட்டது. இந்தநிலையில் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    பின்னர் திடீரென்று பச்சைமலையில் மழை பெய்தது. அதனை தொடர்ந்து துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதுபோல் நேற்று இரவு திருச்சி மாநகரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதுபோல் லால்குடியில் நேற்று மாலை 3 மணி நேரம் மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் துறையூரை அடுத்துள்ள அம்மாபட்டி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி செழியன் என்பவர் கூரை கொட்டகை பலத்த காற்றினால் கீழே சாய்ந்தது.

    இதேபோன்று துறையூரை அடுத்துள்ள பெரமங்கலம், குருவிக்காரன் குளம், காட்டுக்குளம், ஆகிய கிராமங்களில் சூறைக் காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இரவு முழுவதும் சாரல் மழை பெய்த வண்ணமாக இருந்தது.

    துவரங்குறிச்சி பகுதிகளிலும் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது செவந்தாம்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி (வயது 45) என்பவரின் பசு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது, மின்னல் தாக்கி பரிதாபமாக செத்தது. அது 6 மாதம் சினையாக இருந்தது. இதை அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் கால்நடை துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தா.பேட்டை பகுதிகளில் நேற்று முன்தினம் வெயில் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் தா.பேட்டை மற்றும் சுற்றி உள்ள பகுதியில் நள்ளிரவில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது.

    Next Story
    ×