search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஏழை மக்களுக்கு உணவு பொட்டலங்கள்

    கீழக்கொடுமலூர் பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களும், நரிக்குறவர் காலனியில் 60-க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா முன்னிலையில் அபிராமம் இன்ஸ்பெக்டர் மோகன் ஏற்பாட்டின்பேரில் அபிராமம், மேலக்கொடுமலூர், கீழக்கொடுமலூர் பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களும், நரிக்குறவர் காலனியில் 60-க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. அதன்பின் தனி ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பேசும்போது, போலீசார் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு பாதிக்கப்படவில்லை. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். இதில் கமுதி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×