search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருமி நாசினி தெளிக்கும் தீயணைப்பு வீரர்கள்.
    X
    கிருமி நாசினி தெளிக்கும் தீயணைப்பு வீரர்கள்.

    உடுமலை பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

    உடுமலை பகுதிகளில் கொரோனா தொற்று பரவல்அதிகரித்துள்ளது. அதிலும் இரண்டாம் அலையில் நகரப்பகுதியை விட ஊரகப்பகுதிகளில் தொற்று பாதிப்பு அபரிமிதமாக காணப்படுகிறது. இதையடுத்து தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    உடுமலை:

    உடுமலை ஒன்றியத்திலுள்ள 38 ஊராட்சிகளிலும், 300க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.நாள் தோறும் 80க்கும் மேற்பட்டோர் தொற்று பாதித்து கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்கள், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் தொற்று தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மானுப்பட்டி, கணக்கம்பாளையம், பூலாங்கிணர் ஊராட்சிகளில் ஒரு வீதியில்  3க்கும் மேற்பட்ட தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்ட நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவித்து அடைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது :-

    ஊராட்சித்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், சுய உதவிக் குழுவினர் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினரை இணைத்து  தொடர் கண்காணிப்பு மற்றும் தடுப்புப்பணியில் ஈடுபட வேண்டும்.

    பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு அனாவசியமாக வெளியே வருவதை தடுக்க வேண்டும். வீதிகள் தோறும், ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வப்போது முழு சுகாதாரப்பணி மேற்கொள்வது, கபசுர குடிநீர் வழங்குவது, காய்கறி அத்தியாவசிய பொருள் வினியோகத்தை உறுதிப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    கோவிட் தடுப்பு பணியாக கிராமங்களில் வீடு தோறும், சர்வே பணிகள் நடந்து வருகிறது. கணக்கெடுப்பு பணி மற்றும் பாதுகாப்பு குறித்து  திருப்பூர் மாவட்ட மகளிர் திட்டம் உதவி இயக்குனர் நாகராஜன், பி.டி.ஓ., சுப்ரமணியம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும் கிராமங்களில் நடக்கும் மருத்துவ முகாம்களையும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.
    Next Story
    ×