search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திக்கேயன்
    X
    திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திக்கேயன்

    குளிர்பதன கிடங்குகளில் குறைந்த வாடகையில் பழங்களை இருப்பு வைக்கலாம்

    திருப்பூர் மாவட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள குளிர்பதனக் கிடங்குகளில் குறைந்த வாடகையில் காய்கள்,பழங்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் விற்பனைக்குழுவில் உள்ள பல்லடம், உடுமலை, வெள்ளக்கோவில், அவிநாசி ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தலா 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்குகளும், பொங்கலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன  கிடங்கும் செயல்பட்டு வருகிறது.

    இந்த கிடங்குகளில் காய்கள், மலர்களை இருப்பு வைக்க நாள் ஒன்றுக்கு கிலோவுக்கு ரூ.50 பைசா என்றும், பழங்களை இருப்பு வைக்க கிலோவுக்கு 0.02 பைசா என்றும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    அதேபோல 18 கிலோ ஆப்பிள் பெட்டிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.15, ஒரு டன் வாழைப்பழத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.150, மேலும் ஒரு டன் பச்சை மிளகாய், கொத்தமல்லி இருப்பு வைக்க ரூ.500, புளி மற்றும் பருப்பு வகைகளுக்கு ரூ.200, உலர் பழங்களுக்கு ரூ.750 , மஞ்சள் ரூ.400, மிளகு, கிராம்பு போன்ற வாசனை பொருட்கள் மற்றும் இதர பொருட்களுக்கு ரூ.500 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விவசாயிகள் தங்களது காய்கள், பழங்களை குளிர்பதன  கிடங்குகளில் இருப்பு வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×