search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை - மக்கள் மகிழ்ச்சி

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
    சென்னை:

    வெப்பச்சலனம் மற்றும் தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக   மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

    இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 


    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    மழை

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஒன்றரை மணி நேரமாக பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் நிலவியது. 

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இந்த மழையால் வெப்பம் தணிந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. 

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
    Next Story
    ×