என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கடந்த ஒரு வாரத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 26,339 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்3 Jun 2021 8:31 PM IST (Updated: 3 Jun 2021 8:31 PM IST)
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட 26,339 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
விழுப்புரம்:
தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது முதல் 60 வயது வரையுள்ள இணை நோய் உள்ளவர்களுக்கும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி, தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட்டு முதல் தவணை மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இப்பணியானது கடந்த மாதம் 25-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 வயது முதல் 44 வயது வரையுள்ளவர்களில் மொத்தம் 26,339 பேர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Next Story
×