search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கண்காணிப்பு குழுவுக்கு பரிசோதனை கருவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கிய காட்சி.
    X
    கண்காணிப்பு குழுவுக்கு பரிசோதனை கருவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கிய காட்சி.

    வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு கண்காணிப்பு குழுக்கு பரிசோதனை கருவிகள்

    வாலாஜாவில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதலாக 50 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடத்தை சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் தொடங்கிவைத்தார்.
    வாலாஜா: 

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இந்த நிலையில் கூடுதலாக 50 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடத்தை சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் தொடங்கிவைத்தார். 

    அந்த கட்டிடத்தில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார்.

    அப்போது  நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனைதொடர்ந்து வாலாஜா ஊராட்சியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவிற்கு பரிசோதனை செய்யும் கருவிகளை வழங்கினார். இதில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், உதவி கலெக்டர் இளம்பகவத், மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினி, ஊராட்சி உதவி இயக்குனர் குமார், தாசில்தார் ஜெயபிரகாஷ், நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, சினிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×