search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மாயம்
    X
    மாயம்

    தென்காசி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

    தென்காசி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் உச்சிமாகாளி அம்மன் கோவில் 5-ம் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகள் சிந்து (வயது 19). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துக்கொண்டு அங்கிருந்தே படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 23-ந்தேதி காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற சிந்து அதன்பின் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சி அடைந்த சிந்துவின் பெற்றோர் தங்களது உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் தேடினார்கள். ஆனாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனால் இசக்கிமுத்து தென்காசி போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில், எனது மகள் சிந்து நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்துக்கொண்டே படித்து வந்தாள். இந்நிலையில் கடந்த 23-ந்தேதி காலையில் வேலைக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. நாங்கள் பல இடங்களில் தேடியும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே எனது மகளை கண்டுபிடித்து தரவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிந்து பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.

    Next Story
    ×