என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
தேனி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் உறவினர் உடலை எடுத்துச்சென்ற விவகாரம்- ஒருவர் டிஸ்மிஸ்
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள நல்லகருப்பன்பட்டியைச் சேர்ந்த பாலதண்டபாணி (வயது 47). திருப்பூரில் பணியாற்றி வந்த இவர் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினார். உடல் நிலை பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலை உறவினர்கள் வாங்கச் சென்றனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் அங்கிருந்த பணியாளர்கள் உதவியுடன் பாலதண்டபாணி உடலை எடுத்துச் சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதனிடம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் கேட்டார். அதன்படி அளிக்கப்பட்ட அறிக்கையில் பணியாளர்கள் அலட்சியம் காரணமாக கொரோனாவால் இறந்தவரின் உடலை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து பிணவறையில் பணிபுரிந்த நாகஜோதி, ஞானசேகரன் ஆகியோர் மருத்துவக்கல்லூரியில் நுண்ணுயிரியல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தனியார் நிறுவன பணியாளர் பாண்டீஸ்வரனை பணி நீக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவித்துள்ளது என்று முதல்வர் விளக்கமளித்துள்ளார். இது குறித்து முதல்வர் பாலாஜிநாதன் தெரிவிக்கையில், சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவுப்படி, பிணவறையில் உதவியாளர்கள் 5 பேர், வாட்ச்மேன் 2 பேர் ஆகியோர் சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
பிணவறைக்குள் உறவினர்கள் சென்று உடலை எடுத்துச் சென்ற சம்பவத்தில் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.