search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அணைப்புதூரில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு அதிகாரிகள்  சீல் வைத்த காட்சி.
    X
    அணைப்புதூரில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.

    திருப்பூரில் 6 பனியன் நிறுவனங்களுக்கு 'சீல்'

    திருப்பூரில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 6 பனியன் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பெண் தொழிலாளர்கள் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டி அணைபுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பெண் தொழிலாளர்கள் 47 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
      
    இதையறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு  சென்று  விசா ரணை நடத்தினர்.அப்போது அந்த பனியன் நிறுவனம் ஊரடங்கு விதிகளை  மீறி இயங்கி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு அதிகாரிகள்  சீல் வைத்தனர். தொற்று பாதிக்கப்பட்ட  47 பெண் தொழிலாளர்களும் சேவூர் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதேப்போல் திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் முழு ஊரடங்கை மீறி முறைகேடாக பனியன் நிறுவனங்கள் இயங்கி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அங்கு அதிகாரிகள் சென்று சோதனையிட்டனர். அப்போது 2 பனியன் நிறுவனங்கள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நிறுவனங்களுக்கு   சீல் வைக்கப்பட்டது.
     
    மேலும் ஆண்டிபாளையம்  பகுதியில் இயங்கிய 2 பனியன் நிறுவனங்களுக்கும், பொங்குபாளையம் பகுதியில் இயங்கிய நிறுவனத்திற்கும் சீல் வைத்தனர். ஊரடங்கு உத்தரவை மீறி பனியன் நிறுவனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×