search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புடம்
    X
    கோப்புடம்

    கூடுதல் கட்டணம்-தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை

    திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவமனைகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு அனைத்து மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒருங்கிணைந்த முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இலவச மருத்துவ சேவைகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 41 தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    இதில் நாளன்றுக்கு தீவிரமில்லாத சிசிச்சைக்கு ரூ.5 ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைக்கு ரூ.15ஆயிரம், வெண்டிலேட்டர் சிசிச்சைக்கு ரூ.35ஆயிரம், ஊடுருவா வெண்டிலேட்டர் சிசிச்சைக்கு ரூ.30ஆயிரம், ஆக்சிஜன் உதவியுடன் வெண்டிலேட்டர் சிசிச்சைக்கு ரூ.25ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

    இதுபோல் முதல்- அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இல்லாதவருக்கும் இதே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகள் அரசால் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

     இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×