search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுட்டெரிக்கும் வெயில்
    X
    சுட்டெரிக்கும் வெயில்

    திருவாரூரில் 3 நாட்களாக சுட்டெரிக்கும் வெயில்- பொதுமக்கள் அவதி

    கடுமையான வெயிலுடன் அனல் காற்று வீசி வருவதால் பெரும் சிரமாக உள்ளதாகவும் வீட்டில், மின் விசிறிகள் ஓடியபோதும் வெப்பம் அதிகமாக இருப்பதால் தாக்கு பிடிக்க முடியாமல் உள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
    கூத்தாநல்லூர்:

    அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 29-ந் தேதி முடிவுற்றது. இருப்பினும் அடுத்த நாளான 30, 31-ந்தேதி மற்றும் நேற்று (ஜூன் 1-ந் தேதி) வரை 3 நாட்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் கோடைவெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஊரடங்கு காரணமாக குளிர்பான கடைகள் மூடப்பட்டு உள்ளன. பொதுவாக கோடை காலத்தில் மக்கள் அதிக அளவு குளிர்பானங்களை வாங்கி குடிப்பது வழக்கம்.

    தற்போது குளிர்பானம் மற்றும் கரும்புச்சாறு விற்பனை இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உள்பட மாவட்டம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் கடந்த 3 நாட்களாக அதிகம் உள்ளது. அக்னி நட்சத்திர நாட்களை விட தற்போது வெயில் சுட்டெரிப்பதாக மக்கள் கூறுகிறார்கள்,

    கடுமையான வெயிலுடன் அனல் காற்று வீசி வருவதால் பெரும் சிரமாக உள்ளதாகவும் வீட்டில், மின் விசிறிகள் ஓடியபோதும் வெப்பம் அதிகமாக இருப்பதால் தாக்கு பிடிக்க முடியாமல் உள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 29-ந் தேதி முடிவுற்ற நிலையில் அதற்கு அடுத்த நாளான 30- ந் தேதி தான் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதோ என்று நினைக்கும் அளவுக்கு கடந்த 3 நாட்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது.
    Next Story
    ×