என் மலர்

  செய்திகள்

  சென்னை உயர்நீதிமன்றம்
  X
  சென்னை உயர்நீதிமன்றம்

  கொரோனா பாதித்தவர்கள், பலியானவர்கள் புள்ளி விவரங்களை வெளியிடுவது அவமானமல்ல: நீதிமன்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  கொரோனா தடுப்பு நடவடிக்கை, கொரோனா தடுப்பூசி செலுத்துதல் பணி குறித்து சென்னை உயிர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது ‘‘கொரோனா பாதித்தவர்கள், பலியானவர்கள் புள்ளி விவரங்களை வெளியிடுவது அவமானமல்ல’’ என நீதிபதிகள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தின.

  மேலும், ‘‘பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டு இல்லை’’ எனத் தெரிவித்தனர்.

  தமிழக அரசு சார்பில் ‘‘கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் முகம் பார்க்க உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்துகளை சப்ளை செய்யக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.
  Next Story
  ×