search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவால் இறந்தவர்களின் உடலுக்கு ஈஷா மயானத்தில் இறுதிச்சடங்கு
    X
    கொரோனாவால் இறந்தவர்களின் உடலுக்கு ஈஷா மயானத்தில் இறுதிச்சடங்கு

    ஈஷா மயானங்களில் கொரோனாவால் காலமானவர்களை இலவசமாக தகனம் செய்யலாம்

    தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக தகனம் செய்யலாம்.
    கோவை:

    ஈஷா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈஷா மயானங்கள், கோவிட் தொற்றால் காலமானவர்களுக்கு கட்டணமின்றி தகன சேவையை அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கும். இந்த உயிர் கொல்லி வைரசுக்கு அன்பிற்குரியவர்களை பறிகொடுத்தோருக்கு ஆதரவாய் இருக்க விரும்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் ஸ்டாலின்

    அந்த பதிவு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழக சுகாதாரத் துறை ஆகியோருக்கு டேக் செய்யப்பட்டுள்ளது.

    ஈஷா சார்பில் கோவையில் 12 மயானங்கள், சென்னையில் 4, நாமக்கல் மற்றும் நெய்வேலியில் தலா ஒன்று என மொத்தம் 18 மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×