என் மலர்

  செய்திகள்

  ராஜகோபாலன்
  X
  ராஜகோபாலன்

  பாலியல் புகார்- ராஜகோபாலன் ஜாமின் மனு தள்ளுபடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைதான ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
  சென்னை:

  சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் கைதான ராஜகோபாலன் ஜுன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

  இந்த நிலையில், மேலும் 3 மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக இரண்டு சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

  இதையடுத்து பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார் அளித்த மாணவிகளின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

  இந்நிலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  நீதிமன்றத்தில் போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
  Next Story
  ×