search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சென்னையில் 5 மாதத்தில் 150 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்ற புவனேஷ்வர் மற்றும் நிஷித் பண்டாரி ஆகிய 2 குற்றவாளிகள் உட்பட மொத்தம் 29 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்களை தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டில் இதுவரை தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட (ஜனவரி 1-ந் தேதி முதல் மே 28-ந் தேதி வரை) சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 98 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு மற்றும் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 29 குற்றவாளிகள், சைபர் குற்றம் சார்ந்த வழக்குகளில் ஈடுபட்ட 10 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தியும், விற்பனை செய்த 12 குற்றவாளிகள், உணவு பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி, ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்ற 2 குற்றவாளிகள் என மொத்தம் 150 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மே மாதத்தில் மட்டும் 01.5.2021 முதல் 28.5.2021 வரையில் சட்டம் ஒழுங்கு குற்றத்தில் ஈடுபட்ட 17 குற்றவாளிகள், திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 9 குற்றவாளிகள், போதை பொருள் வைத்திருந்தது தொடர்பாக 1 குற்றவாளி மற்றும் கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும். உயிர் காக்கும் மருந்தான ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி வைத்திருந்து அதிக விலைக்கு விற்ற புவனேஷ்வர் மற்றும் நிஷித் பண்டாரி ஆகிய 2 குற்றவாளிகள் உட்பட மொத்தம் 29 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×