என் மலர்

  செய்திகள்

  டெலிவரி பாய்
  X
  டெலிவரி பாய்

  மக்களின் பசியை தீர்க்க பறக்கும் டெலிவரி பாய்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் முழு ஊரடங்கால் தவிக்கும் பொதுமக்களின் பசியை ஆன்லைன் டெலிவரி பாய்கள் தீர்த்து வருகின்றனர்.இருப்பினும் போலீசார் இடையில் மறிப்பது இடைஞ்சலாக உள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
  திருப்பூர்:

  கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் தொற்று குறையாததால் ஊரடங்கு வருகிற 7-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக காய்கறி-மளிகை பொருட்கள் நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
    
  ஓட்டல்களை காலை  6மணி முதல் 10மணி, மதியம் 12மணி முதல் 3மணி, மாலை 6மணி முதல் இரவு 9மணி வரை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் பார்சல்கள் மட்டும் விநியோகிக்கப்படுகிறது.

  இந்தநிலையில் பொதுமக்கள் பலர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவதால் உணவு வாங்க ஓட்டல்களுக்கு செல்வதை   தவிர்த்து வருகின்றனர்.பெரும்பாலானவர்கள் ஆன்லைன் உணவு நிறுவனங்களையே நாடுகின்றனர்.இதனால் ஆன்லைன் உணவு நிறுவன டெலிவரிபாய்கள் மக்களின் பசியை தீர்க்க  மோட்டார் சைக்கிள்களில் பறந்த வண்ணம் உள்ளனர்.மேலும் ஊரடங்கு காரணமாக முன்பை விட அதிக ஆர்டர்கள் வந்த வண்ணம்  உள்ளன. இதனால் அரசு அனுமதித்துள்ள குறிப்பிட்ட நேரத்தில் இடைவிடாமல் உணவு சப்ளை செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.

  இதனிடையே  இடையில் போலீசார் மறித்து சோதனை செய்வது இடைஞ்சலாக உள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த  டெலிவரிபாய்கள் கூறுகையில், காலை 6மணி முதல்  10மணி வரை உணவு சப்ளை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.சிலர்  9-55மணிக்கு ஆன்லைன்  மூலம் உணவு ஆர்டர் செய்கின்றனர்.  இதனால் அவசரமாக உணவினை பார்சல் செய்து கொண்டு செல்ல வேண்டியது உள்ளது.போலீசார்  காலை 9மணிக்குள் மட்டும் ஆன்லைன்  ஆர்டர்களை பெற வேண்டும் என்கிறார்கள்.வாடிக்கையாளர்கள் சிலருக்கு பல்வேறு வேலைகள் இருக்கும். இதனால் 9மணியை கடந்து புக்கிங் செய்பவர்கள்  உள்ளனர்.

  திருப்பூர் மாநகரை பொறுத்தவரை பல்வேறு இடங்களில் சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், உணவு பொருட்கள் இல்லாமல்  பலர் தங்கியுள்ளனர். அவர்கள்  ஓட்டல்களையே நாட வேண்டியது உள்ளது. எனவே அவர்களுக்கு சேவையாற்ற காலை 10மணிக்குள்ளாக வரும் ஆர்டர்களை பெறுகிறோம். ஆனால் போலீசார் இடையில் தடுத்து நிறுத்துவதன் மூலம் வாடிக்கை யாளர்கள் உணவின்றி தவிக்க வாய்ப்புள்ளது. எனவே முழு நேரமும் உணவு சப்ளை செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும். தற்போது  மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட் களையும் சப்ளை செய்ய வேண்டியது உள்ளது. அதற்கேற்ப அரசு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.
  Next Story
  ×