search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பரமத்திவேலூர் அருகே அஞ்சலக டெபாசிட் பணம் 20 லட்சம் மோசடி

    கிளை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்து வரவு-செலவு செய்தவர்கள் மாதாந்திர சேமிப்பு மற்றும் இட்டு வைப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தபால் அலுவலகம் முன்பு கூடி தங்களது பணத்தை கேட்டு முற்றுகையிட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள மேல்சாத்தம்பூர்பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரியம்மன்கோவில் புதூரில் நடந்தை தபால் அலுவலகத்தின் கிளை செயல்பட்டு வருகிறது.

    இந்த கிளை அஞ்சலகத்தில் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், கூலி தொழிலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் சேமிப்புக் கணக்கு, வைப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட கணக்குகளை தொடங்கி வரவு-செலவு செய்து வருகின்றனர்.

    இந்த கிளை அஞ்சலகத்தில் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் இருந்து வருகிறார். மாதாந்திர சேமிப்பு கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்குக்கு செலுத்துபவர்களுக்கான கணக்குப் புத்தகங்களை அவரே வைத்துக்கொண்டு பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் ஒரு சிலர் தங்களின் கணக்கு காலக்கெடு முடிந்த நிலையில் பணத்தை திரும்ப பெற கிளை அஞ்சலகத்தை நாடியுள்ளனர். அப்போது அவர்கள் கணக்கில் பணம் ஏதும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் கிளை அஞ்சலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காட்டு தீ போல் பரவியது.

    இதனையடுத்து அந்த கிளை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்து வரவு-செலவு செய்தவர்கள் மாதாந்திர சேமிப்பு மற்றும் இட்டு வைப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தபால் அலுவலகம் முன்பு கூடி தங்களது பணத்தை கேட்டு முற்றுகையிட்டனர்.

    அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கிளை அஞ்சலக அலுவலர் தங்கவேல் பொதுமக்களின் பணத்தை கணக்கில் சேர்க்காமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தங்கவேல் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த நடந்தை அஞ்சலக அலுவலர்கள் மாரியம்மன் கோவில்புதூர் கிளை அலுவலகத்திற்கு வந்து அங்கு கூடி இருந்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் இது குறித்து முறையாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகையை மீட்டுத்தர வேண்டும் என மேல் சாத்தம்பூர் கிராமர் பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×