என் மலர்

  செய்திகள்

  கோப்புப் படம்
  X
  கோப்புப் படம்

  கோயம்பேடு மார்க்கெட் இன்று வழக்கம்போல் செயல்படும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று சந்தைக்கு வார விடுமுறை நாளான இன்று கோயம்பேடு மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

  பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. பகல் 12 மணி வரை கடைகள் செயல்பட வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
   
  தற்போது சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வணிகர் சங்கங்கள் இணைந்து மினி வேன், ஆட்டோ, 3 சக்கர சைக்கிள்கள் உள்ளிட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழம் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே அனுப்பப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில், வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று சந்தைக்கு வார விடுமுறை நாளான இன்று மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

  மேலும், கோயம்பேடு மார்க்கெட் கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்திலேயே செய்யப்பட்டு இருக்கிறது. இதில் கடந்த 2 நாட்களாக கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
  Next Story
  ×