search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
    X
    நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு -தமிழக நிதியமைச்சர்

    ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்பது ஏற்புடையதாக இல்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
    சென்னை:

    முதல் முறையாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்பது ஏற்புடையதாக இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எங்களுடைய மறுப்பை பதிவுசெய்தோம்.

    மாநிலங்களுக்கான நிலுவைத்தொகையை வழங்க கடன் வாங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றாவிட்டால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜி.எஸ்.டி விதிகளில் மாற்றங்கள் தேவை. தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு பேசுவதற்கான போதிய நேரம் வழங்கப்படவில்லை. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×