என் மலர்

  செய்திகள்

  சங்கராபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
  X
  சங்கராபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

  சின்னசேலம், சங்கராபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சின்னசேலம், சங்கராபுரம் மற்றும் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
  சங்கராபுரம்:

  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சங்கராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதை வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.

  இதைத் தொடர்ந்து முகாமுக்கு வந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டாக்டர்.புவனேஸ்வர், செவிலியர்கள் சுசிலா, சுமதி ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். இதில் 180 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுசேவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சின்னசேலத்தில் நடைபெற்றது. இதை வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர்கள் மாயக்கண்ணன், சார்லஸ்விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இதை தொடர்ந்து பெத்தானூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சிவபிரசாத் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தினர். முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு ஆய்வுசெய்தார். அப்போது பெரும் சவாலாக உள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார். முகாமில் சின்னசேலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். இதில் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

  மூங்கில்துறைப்பட்டு அருகே ஈருடையாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்தவர் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
  Next Story
  ×