என் மலர்

  செய்திகள்

  கருப்பு பூஞ்சை
  X
  கருப்பு பூஞ்சை

  சேலம் மாவட்டத்தில் 39 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் 39 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  சேலம்:

  சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் அதிகளவு ஏற்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 85 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு கருப்பு பூஞ்சை என்ற நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 8 பேர் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இதுகுறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல் கூறும்போது, ‘சேலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் 39 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார்.

  Next Story
  ×