என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  ஊரடங்கை மீறி நடைபெறும் வியாபாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொற்று பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் திருப்பூரில் அத்துமீறும் நபர்களால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
  திருப்பூர்:

  முழு ஊரடங்கு காரணமாக திருப்பூரில் மளிகை,காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை பொருட்கள்  நடமாடும் வாகனங்கள்  மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

  இந்தநிலையில் திருப்பூரில் சில இடங்களில் சில கடைக்காரர்கள் தங்கள் கடைகளை பூட்டி விட்டு கடை முன்புறம் தள்ளு வண்டி அல்லது தரையில் பொருட்களை பரப்பி விற்கின்றனர்.இதனால் கடை முன் எந்நேரமும் 10-க்கும் மேற்பட்டோர் கும்பலாக சேர்ந்து விடுகின்றனர். 

  தாராபுரம் ரோடு, செட்டிபாளையம் பகுதிகளில் சில டீக்கடைக்காரர்கள் கடை முன் கேன் டீ மற்றும் பலகாரம் வைத்து விற்பனை செய்கின்றனர். அங்கும் பலர் கூட்டமாக கூடி நிற்கின்றனர்.

  மேலும் சில கடைக்காரர்கள் தங்களது வீடுகளில் வைத்து பொருட்களை விற்பனை செய்கின்றனர். ஊரடங்கை பொருட்படுத்தாமல் செயல்படும் நபர்களால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே போலீசார் தெரு பகுதிகளில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

  Next Story
  ×