search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    முதியோர்களுக்கு உதவ ‘ஹலோ சீனியர்ஸ்’ சேவை மையம்

    திருப்பூர் மாவட்டத்தில் முதியோர்களுக்கு உதவும் வகையில் ‘ஹலோ சீனியர்ஸ்’ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவை தவிர்த்து மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த கடினமான சூழலில் தன்னார்வ அமைப்பு களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் முதியோர்களுக்கு உதவும் வகையில் 'ஹலோ சீனியர்ஸ்' என்ற 24 மணி நேர சேவை மையம் எஸ்.பி., திஷா மிட்டல் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த மையத்தை 0421-2970042 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அதேபோல், பெண்களுக்கான 24 மணி நேரம் சேவை மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளுக்காக உரிய அலுவலகத்துக்கு சென்று நிவாரணம் தேட முடியாத நிலையில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில், எஸ்.பி.,அலுவலகத்தில் சேவை மையம்  தொடங்கப்பட்டுள்ளது. 94981-81208, 94981-01320 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு பாதுகாப்பு, தேவைகள், தகவல் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.புகார்தாரர் பெயர் மற்றும் முகவரி போன்ற விபரம் ரகசியம் காக்கப்படும். 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு தொடர்பாக உள்ள சந்தேகங்களை 0421-2970031 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×