என் மலர்

  செய்திகள்

  கொரடாச்சேரியில் நடமாடும் காய்கறி விற்பனை நிலையத்தை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.
  X
  கொரடாச்சேரியில் நடமாடும் காய்கறி விற்பனை நிலையத்தை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

  18 வயதுக்கு மேற்பட்ட 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - அமைச்சர் மெய்யநாதன் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
  திருவாரூர்:

  திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை தாங்கினார்.

  மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலை வகித்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, நாகை எம்.பி. செல்வராசு, எம்.எல்.ஏக்கள் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயது முதல் 44 வயது வரை உள்ள 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக தடுப்பூசி மருந்து 23,400 எண்ணிக்கையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 3,500 எண்ணிக்கையிலான தடுப்பூசி மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய 75 டாக்டர்கள், 95 செவிலியர்கள், 41 லேப் டெக்னீசியன்கள் மற்றும் பல்நோக்கு பணியாளர்களுக்கு வருகிற 28-ந் தேதி நேர்முக நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் 29-ந் தேதி பணியமர்த்தப்படுவார்கள். கொரோனா நோய் தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை.

  இவ்வாறு அமைச்சர் கூறினார்.

  இதில் முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், திட்ட இயக்குனர் தெய்வநாயகி, சுகாதார துணை இயக்குனர் கீதா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) உமா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், உதவி கலெக்டர்கள் பாலச்சந்திரன், அழகர்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  கொரடாச்சேரியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் நடத்தப்படும் நடமாடும் காய்கறி விற்பனை நிலையத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. மிக விரைவில் தொற்று பாதிப்பு இல்லாத நிலையை தமிழகம் எட்டும்’ என்று கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தா, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் கலியபெருமாள், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிசாமி, மண்டல அலுவலர் பொன்னியின்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, முத்துக்குமார், மேலாளர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் சாந்தா, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் கீதா, உதவி கலெக்டர் அழகர்சாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், நகராட்சி ஆணையர் கமலா, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், மருத்துவமனை நிலைய அலுவலர் டாக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

  கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் நேற்று 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமில் மாவட்ட கலெக்டர் சாந்தா, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. நகராட்சி ஆணையர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார். முன்னதாக நடமாடும் காய்கறி விற்பனை மையங்களை தொடங்கி வைத்தார்.

  Next Story
  ×