search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    முழுப்பாலையும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டுகோள்

    விவசாயிகளிடம் இருந்து முழுப்பாலையும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    திருப்பூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் இணையவழியில் நடைபெற்றது.கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித்தார்.

    இதில் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் திருத்த சட்ட மசோதாக்களையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பின்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் வீடுகளிலும் மே 26-ந்தேதி கருப்புக் கொடி ஏற்றி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பால் பண்ணைகள் பொதுமுடக்கத்தை காரணம் காட்டி விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்ய மறுப்பதுடன், கொள்முதல் விலையையும் ரூ.13 குறைத்துவிட்டதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். ஆவின் நிறுவனமும் விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்ய மறுக்கிறது. ஆகவே, விவசாயிகளிடம் இருந்து முழுப்பாலையும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமுடக்கம் காரணமாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள், தேங்காய் ஆகியவற்றுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×