search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பொன்முடி
    X
    அமைச்சர் பொன்முடி

    பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும்- அமைச்சர் வலியுறுத்தல்

    தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
    சென்னை:

    மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மாநில கல்வி அமைச்சர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு தெரிவித்த ஆலோசனையை தமிழகத்திற்கு ஏற்றாற்போல் மாற்றுவது பற்றி செவ்வாய்க்கிழமைக்குள் முடிவெடுப்போம் என்று தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், ‘பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை’ என்ற தமிழக அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார்.
    Next Story
    ×