search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு
    X
    அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு

    பிளஸ்2 பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் -அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

    பிளஸ்2 பொதுத்தேர்வு தொடர்பாக தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து செவ்வாய்க்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சகர்கள் குழு தெரிவித்தது.
    சென்னை:

    12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் நீட், ஜெஇஇ உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தியது. தமிழகம் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் முக்கிய அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்திற்கு பிறகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

    நாடு முழுவதும் உள்ள மாநில அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் அனைவரும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கியம் என்பதால், அதை நடத்த வேண்டியது அவசியம் என்று கூறினர்.  ஆனால், மாணவர்களின் நலன் கருதி கொரோனா தொற்று குறைந்தபிறகே நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

    மத்திய அரசு சில மாறுபாடுகளுடன் தேர்வை நடத்த வேண்டும், பொதுத்தேர்வு நேரம் குறைப்பு, விரிவான விடையளிக்கும் முறைக்கு பதிலாக கொள்குறி வகையிலான தேர்வை நடத்தலாம் எனவும் கூறினர். 

    தமிழகத்திலும் பிளஸ்2 தேர்வு நடத்தப்படவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. ஆனால் தமிழகம் தேர்வு தொடர்பான இறுதி முடிவை எடுக்கவில்லை. மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால், கொரோனா பரவல் குறைந்த பிறகே தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். 

    தேர்வு தொடர்பாக முதல்வருடன் கலந்து ஆலோசித்து தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறினோம். செவ்வாய்க்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சகர்கள் குழு தெரிவித்தது. எனவே, விரைவில் முதல்வருடன் ஆலோசித்து செவ்வாய்க்கிழமைக்குள் தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறினேன்.

    இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
    Next Story
    ×