search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்சிஜன் டேங்கர் லாரிகள்
    X
    ஆக்சிஜன் டேங்கர் லாரிகள்

    ஒடிசா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 79.30 டன் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் வந்தன

    ஒடிசா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட 79.30 டன் ஆக்சிஜன், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    மதுரை:

    ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து கொண்டு வரப்பட்டு ஆக்சிஜன் டேங்கர் லாரி களை மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ரெயில் நிலையத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பார்வையிட்டு அவற்றை மருத்துவமனை பயன்பாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கரூர் ஆகிய 7 மாவட்ட மருத்துவமனைகளுக்கு இந்த ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    பின்னர் அமைச்சர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலமாக திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 4 டேங்கர் லாரிகளில் 79.30 டன் ஆக்சிஜன் ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டது.

    இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 6 டன், சிவகங்கை மாவட்டத்துக்கு 6.76 டன், தோப்பூரில் உள்ள தனியார் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனத்துக்கு 3 டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதேபோல தேனி மாவட்டத்துக்கு 7.5 டன்னும், மதுரை தெற்கு தெரு தனியார் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனத்துக்கு 6 டன்னும் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.

    மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தோப்பூர் அரசு மருத்துவமனைக்கு 17.4 டன், திருச்சி மாவட் டத்துக்கு 17.7 டன், திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு 15.88 டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அப்போது கொரோனா தடுப்பு பணிகளுக்கான மதுரை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்திரமோகன், கலெக்டர் அனீஷ்சேகர், வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், சோழவந்தான் வெங்கடேசன், ஆர்.டி.ஓ. முருகானந்தம், தாசில்தார் பழனிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×