search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடன் வசூலித்த தனியார் நிதி நிறுவனத்தை தாசில்தார் ராஜன்பாபு மற்றும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தபோது எடுத்தபடம்
    X
    கடன் வசூலித்த தனியார் நிதி நிறுவனத்தை தாசில்தார் ராஜன்பாபு மற்றும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தபோது எடுத்தபடம்

    ஊரடங்கு காலத்தில் கடன் வசூல்: குடவாசலில், தனியார் நிதி நிறுவனத்துக்கு சீல்

    ஊரடங்கு காலத்தில் கடன் வசூலில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
    குடவாசல்:

    கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. அதன்படி மளிகை, காய்கறி, மீன், இறைச்சி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோரங்களில் பல்ே்வறு வியாபாரங்களை செய்து அன்றாடம் வருவாய் ஈட்டி வாழ்க்கை நடத்தி வந்தவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் பலருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடன் வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் செயல்பட்டுவரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்று அரசின் உத்தரவை மீறி ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களிடம் கடன் வசூலில் ஈடுபட்டதாக, குடவாசல் தாசில்தார் ராஜன்பாபுவுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி அவர், குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி, பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா ஆகியோருடன் அங்கு சென்று நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தார்.
    Next Story
    ×