search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்த புகையிலை, பான்மசாலா மூட்டைகளை விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆய்வு காட்சி
    X
    பறிமுதல் செய்த புகையிலை, பான்மசாலா மூட்டைகளை விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆய்வு காட்சி

    எட்டயபுரத்தில், மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை, பான்மசாலா பறிமுதல்

    எட்டயபுரத்தில் மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை, பான்மசாலைவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    எட்டயபுரம்

    எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், முத்து விஜயன் ஆகியோர் நேற்று எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காய்கறிகளுடன் ஒரு மினி லாரி வந்து கொண்டிருந்தது.

    சந்தேகத்தின் பெயரில் அந்த லாரியை எட்டயபுரம் போலீசார் சோதனையிட்டனர். அப்போது காய்கறிகளுக்கு கீழே 24 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்மசாலா இருந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். உடனே எட்டயபுரம் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வண்டியை ஓட்டி வந்த டிரைவர் குளத்தூரை சேர்ந்த பழனி என்பவர் தப்பி ஓடி விட்டார்.

    வண்டியின் உரிமையாளர் கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த செல்லக்கனி மகன் கண்ணன் (வயது 35), மேலும் அவரது உறவினர் பனையடிப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பழனிவேல்( 31) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது, விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய குளத்தூரைச் சேர்ந்த பழனி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×