search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருத்தணி அருகே ரெம்டெசிவிர் மருந்து விற்றவர் கைது

    மாறுவேடத்தில் இருந்த போலீசார் மருந்து கொண்டு வந்தவர்களிடம் பணம் கொடுக்கும்போது மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் முருகன் அவரை கைது செய்து அவரிடம் இருந்து மூன்று ரெம்டெசிவிர் மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருத்தணி பகுதியில் கொரோனா தொற்றுக்கு பயன்படுத்தும் ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக மாநில குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்சுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் மாறுவேடத்தில் திருத்தணி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருத்தணி-கன்னிகாபுரம் சாலையில் ரெம்டெசிவிர் ஊசி விற்பது தெரியவந்தது. இதையடுத்து மாறுவேடத்தில் இருந்த போலீஸ்காரர் மூன்று ஊசிகள் தருமாறு கேட்டுள்ளார். இதன் விலை 75 ஆயிரம் ரூபாய் என கூறியுள்ளார்.

    மாறுவேடத்தில் இருந்த போலீசார் மருந்து கொண்டு வந்தவர்களிடம் பணம் கொடுக்கும்போது மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் முருகன் அவரை கைது செய்து அவரிடம் இருந்து மூன்று ரெம்டெசிவிர் மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அந்த நபர் திருத்தணி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரபாபு (50) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் ராஜேந்திரபாபுவை கைது செய்தனர்.

    பின்னர் திருத்தணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×