search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கிய நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதித்த நிலையில் இதுவரை இல்லாத வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு உயர்ந்தது. பின்னர் சற்று குறைய தொடங்கிய தொற்று கடந்த 4 நாட்களாக 700-க்கு கீழ் இருந்தது. நேற்று அது பாதியாக குறைந்து 376 ஆக இருந்தது. அதே போல் தென்காசி மாவட்டத்திலும் நேற்று முன்தினம் 456 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய பாதிப்பு 377 ஆக குறைந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது மாவட்டத்தில் ஒருநாள் பாதிப்பு அதிகபட்சமாக 500-க்குள் இருந்தது. ஆனால் தற்போது தினமும் 700, 800 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது வந்தது. நேற்று புதிய உச்சமாக மாவட்டம் முழுவதும் 1024 பேர் பாதிக்கப்பட்டனர்.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கிய நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு காய்கறி மார்க்கெட்டுகள் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரித்து அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறு இல்லாமல் உள்ளது.

    எனவே தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் காய்கறி மார்க்கெட்டுகளை அமைக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×