search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு தள்ளுவண்டிகள்

    விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு மானிய விலையில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட உள்ளது.
    குடிமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் மோகன்ரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகளே விளைபொருட்களை தரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய உதவும் வகையில் மானிய விலையில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட உள்ளன. குடிமங்கலம் வட்டாரத்துக்கென 6 வண்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய உதவும்.

    இதேப்போல தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சொட்டுநீர்பாசனம் மூலமாக அதிக மகசூல் எடுக்கும் விதமாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானிய விலையிலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் பாசனக்கருவிகள் விநியோகிக்கப்படுகிறது.

    மேலும் டீசல் பம்ப் செட், மின் மோட்டார் பம்ப் செட் அமைக்க 50 சதவீத மானியம், வயலுக்கு அருகே பாசன நீர் கொண்டு செல்ல குழாய் அமைக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.10,000 ,பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த்தொட்டி அமைக்க சதுர மீட்டருக்கு ரூ.350 வீதம்  பயனாளிக்கு ரூ.40,000 மானிய உதவியாக அளிக்கப்படுகிறது.

    பயன்பெற விரும்பும் விவசாயிகள் குடும்ப அட்டை, அடங்கல் கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் சான்று, ஆதார் அட்டை, நிலவரைபடம்,  பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-3, வங்கிக்கணக்கு புத்தகம், சிறு குறு விவசாயிக்கான சான்று ஆகியவற்றுடன் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×