என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு: தமிழக அரசு உத்தரவு
Byமாலை மலர்16 May 2021 12:11 PM GMT (Updated: 16 May 2021 12:11 PM GMT)
கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நேற்று 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஒருபக்கம் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. பொதுமக்களும் மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தமிழக அரசு தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் ‘‘மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமுமில்லாமல் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’’ என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story
×