search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    விபத்து
    X
    விபத்து

    வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

    கோவை மாவட்டம் அன்னூரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஜீவா நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26).

    சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சத்தி- கோவை ரோட்டில் சென்றார். அப்போது மொபட் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலைதடுமாறி சுரேஷ் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சுரேஷை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை சுங்கம்- உக்கடம் பைபாஸ் ரோட்டில் 60 வயது மதிக்கதக்க முதியவர் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×