search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவையில் ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 20 பேர் கொரோனாவுக்கு பலி

    கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,328 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் 20,173 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் 2-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீதிகள் அடைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவலை கண்டறிய தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று ஒரே நாளில் 3,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 358 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 6 பெண்கள், 14 ஆண்கள் உள்பட ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 20 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 857 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 1,222 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,328 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது கொரோனா பாதிப்புடன் 20,173 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 21 உள்ளது. இதில் 21 படுக்கைகளும் நிரம்பி உள்ளது. ஆக்சிஜன் படுக்கைகள் மொத்தம் 678 உள்ளது. இதில் 476 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 20 படுக்கைகள் காலியாக உள்ளது. சாதாரண படுக்கைகள் மொத்தம் 382 உள்ளது. இதில் 87 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 295 படுக்கைகள் காலியாக உள்ளது. இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள 14 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை 14 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆக்சிஜன் படுக்கைகள் 286 உள்ளது. இதில் 276 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 10 படுக்கைகள் காலியாக உள்ளது. சாதாரண படுக்கைகள் 353 உள்ளது. இதில் 530 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 177 படுக்கைகள் காலியாக உள்ளது.

    Next Story
    ×