search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.ஏ.பி.வாய்க்கால்
    X
    பி.ஏ.பி.வாய்க்கால்

    பராமரிப்பில்லாத கால்வாய்களால் சாலையில் வழிந்தோடும் தண்ணீர்

    கடைமடை விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இன்றி தவிக்கும் சூழலில், உடுமலை பகுதிகளில் பராமரிப்பில்லாத பாசன நீர் வீணாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணை மூலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள 3,77 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இத்திட்டத்தில் காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள கடைமடை விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்காக விவசாயிகள் பலகட்ட போராட்டங்களிலும், நீதிமன்றங்களை நாடி வழக்குகளும் தொடுத்துள்ளனர்.
     
    இந்நிலையில் திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாய் வழியாக கடந்த 6-ம்தேதியில் இருந்து 4-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
     
    உடுமலை கிளை வாய்க்கால் மூலமாக உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், பூலாங்கிணறு, பாப்பான்குளம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.
     
    மடத்துக்குளம் வட்டாரத்துக்குட்பட்ட பாப்பான்குளம், பெருமாள்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பி.ஏ.பி. வாய்க் காலில் உடைப்பு ஏற்பட்டு, பாசன நீர் சாலைகளில் வழிந்தோடுகிறது.
       
    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பல ஆண்டுகளாக பி.ஏ.பி. பாசன வாய்க்கால்கள் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் ஒவ்வோர் ஆண்டும் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும்போது, ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது வழக்கம். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர்.
     
    பி.ஏ .பி. உதவிப்பொறியாளர் ஜெயக்குமார் கூறும்போது, இதுபோன்று தண்ணீர் தேவைப்படாத சில விவசாயிகள் அவர்களின் நிலத்துக்குள் வரும் தண்ணீரை அடைத்து விடுவதால் உடைப்பு ஏற்பட்டு வெளியேறுகிறது. உதாரணமாக தக்காளி நடவு செய்த விவசாயிக்கு தண்ணீர் தேவைப்படாத நிலை இருக்கும். இதுபோன்ற விவசாயிகளின் நடவடிக்கைகளால்தான் பாசன நீர் வீணாகிறது. பாசனசபை சங்கங்கள் உருவாக்கப்படுவதன் மூலமாக தான் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் என்றார். 
    Next Story
    ×