search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் காவல் துறை சார்பில் கொரோனா கட்டுப்பாட்டு அறை

    திருப்பூரில் 24 மணி நேரமும் செயல்படும் காவல் கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வந்தது.
    திருப்பூர்:
    திருப்பூர்  மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், காவல் துறை சார்பில் கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செல்போன்  எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்  மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் வழிகாட்டுதல்படி, திருப்பூர் மாவட்ட  காவல் அலுவலகத்தில் வாரத்தில் 7 நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில்  கொரோனா-19 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. 

    காவல் ஆய்வாளர்  பழனியம்மாள் தலைமையில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் எந்நேரமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தேவையான உதவியை  பெறவும், புகார் தெரிவிக்கும் வகையிலும் தொலைபேசி எண் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. 

    திருப்பூர்  மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் 0421-2970031 என்ற  செல்போன்  எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான உதவிகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×