search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி

    உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படுகிறது.
    உடுமலை:

    உடுமலை வட்டத்தில்  கொரோனா  2-வது அலை நாளுக்கு நாள் தீவிரமாக  பரவி வருகிறது. இதனால் உடுமலை அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட  கொரோனா  நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இதில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 5 பேர்  உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக உடுமலை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி இல்லாததால் இங்கு வரும் நோயாளிகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
     
    இந்நிலையை போக்க உடுமலை ரோட்டரி சங்கம் மற்றும் கோவை கிழக்கு ரோட்டரி சங்கம் இணைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்க முடிவு செய்தனர். இதன்படி ரூ.27 லட்சம் மதிப்பில் இதற்கான கருவிகள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு  வந்துசேர்ந்தன. இதைத்தொடர்ந்து உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இணைப்புகள் கொடுக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

    இது குறித்து ரோட்டரி சங்க திட்ட இயக்குனர்  பாலசுந்தரம்  கூறியதாவது:-

    இந்த புதிய கட்டமைப்பின் மூலம் 96 சதவீத தூய்மையான ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் . ஒரு நிமிடத்துக்கு 100 லிட்டர்  ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம். கொரோனா தொற்று மற்றும் இணை நோய்கள் அதிகம் உள்ள நோயாளிகள் 20 பேருக்கு தொடர்ந்து 24 மணி நேரமும் பயன்பெறும் வகையில் இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேரிடர்  ஒழிந்த பின்பும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கும், ஆப்ரேஷன் தியேட்டருக்கும் இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் பெரும் உதவியாக இருக்கும்.

    தற்போது கொரோனா வார்டுகளுக்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    நாளை 17-ந்தேதி  திங்கட்கிழமை   முதல் கொரோனா நோயாளிகளுக்குத் தடையில்லா ஆக்சிஜன் வழங்கப்படும். இந்த  திட்டத்துக்கு உடுமலை வியாபாரிகள் சங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் உதவியுள்ளன என்றார்.  இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர்  கலந்துகொண்டனர். 
    Next Story
    ×