search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,410 பேர் பாதிப்பு

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று 1,410 பேர் பாதிக்கப்பட்டனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் பாதிப்பால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எகிறி வருகிறது.

    இதைக் கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, பொதுமக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்லவேண்டும், உரிய சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

    இருப்பினும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு தொற்று நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பித்தும், இதன் தாக்கம் குறையவில்லை.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 410 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 77 ஆயிரத்து 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் 68 ஆயிரத்து 540 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 7 ஆயிரத்து 992 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 978 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 14 பேர் இறந்து உள்ளனர்.
    Next Story
    ×