search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் குமரன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம்.
    X
    திருப்பூர் குமரன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம்.

    திருப்பூரில் 1,150 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

    திருப்பூர் மாவட்டத்தில் 9 இடங்களில் 1,150 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர்  மாவட்டத்தில் 7  இடங்களில்  1,000 படுக்கைகளுடன் கொரோனா கண்காணிப்பு மையம் பயன்பாட்டில் உள்ளது.அவற்றில் சாதாரண பாதிப்புக்கு உள்ளான  500க்கும் அதிகமானவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பரவல் அதிகரித்துள்ளதால்  மேலும், 1,150 படுக்கைகளுடன், கூடுதல் கொரோனா மையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் களமிறங்கியுள்ளது.

    உடுமலை அரசு கல்லூரி,  அவிநாசி மகாராஜா கல்லூரி, திருப்பூர் சேவா சமிதி, சிக்கண்ணா கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி, ஜெய்வாபாய் பள்ளி, குமரன் கல்லூரிகளில் கொரோனா மையம் இயங்கி வருகிறது.முதலிபாளையம் ‘நிப்ட் -டீ’ கல்லூரியில்  250 படுக்கை, தாராபுரம் ஐ.ஐ.டி.,யில் 19, அவிநாசி ஐ.கே.எப்., கண்காட்சி மையத்தில்  200 என 469 படுக்கை வசதி இந்த வாரம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

    திருப்பூர் குலாலர் திருமண மண்டபம் - 25, பல்லடம் அரசு ஆண்கள் பள்ளி - 100, பெண்கள் பள்ளி - 100, பல்லடம் அரசு கல்லூரி -150, தாராபுரம் ஏஞ்சல் கல்லூரி  - 250, தாராபுரம் மகாராணி நர்ஸிங் கல்லூரி - 65 என 690 படுக்கை வசதியுடன் கூடிய மையங்கள்  இரண்டு வாரங்களில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், 1,150 படுக்கைகளுடன், கூடுதல் கொரோனா மையம் அமைக்க  மாவட்ட நிர்வாகம் களமிறங்கியுள்ளது.
    Next Story
    ×