search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

    தமிழகத்தில் உள் மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    மீனவர்கள் குமரிக்கடல் மன்னார்வளைகுடா தென்கிழக்கு அரபிக்கடல் கேரள, கர்நாடக கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

    தாக்டே புயலானது தற்போது கர்நாடகா கரையிலிருந்து மேற்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரக் கூடும்.

    இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×