search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா சிகிச்சை அளிக்க தற்காலிக பணியாளர்கள் நியமனம்

    கொரோனா சிகிச்சை பணிக்காக தற்காலிக ஊழியர் நியமனம் செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா கண்காணிப்பு மையங்கள் 1,000 படுக்கையுடன் இயங்கி வருகிறது. இந்த வாரம் முதல் 1,150 படுக்கைகளுடன் புதிய மையங்களும் அமைக்கப்பட உள்ளன. புதிய மையங்களில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் முன்வரலாம். 

    தன்னார்வலர், ஓய்வு பெற்ற டாக்டர்கள், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற செவிலியர்கள், டாக்டர்கள், அறிவியல் பட்டதாரிகள் முன்வரலாம். கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ பணியாளர் தேவை என்பதால் தற்காலிக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். மாவட்டத்தில் 62 டாக்டர், 148 செவிலியர், 11 லேப் டெக்னீசியன்கள் ,8புள்ளிவிவர பதிவாளர்கள், 74 மருத்துவமனை பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். 

    ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்புவோரும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற விருப்ப முள்ளவர்களும் திருப்பூர் பி.என்.ரோடு, பூலுவபட்டி பிரிவில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.
     
    கூடுதல் விவரங்களுக்கு:- 0421-2971199, 2478500 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    Next Story
    ×