search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வாணியம்பாடி அருகே கொரோனா பரவலால் துண்டிக்கப்பட்ட ஆந்திர எல்லை மலை கிராமம்

    தொற்று பாதிக்கப்பட்ட 24 பேரில் 23 பேரையும் அனுப்பி வைத்த நிலையில், ஒருவர் மட்டும் மருத்துவமனைக்கு வரமாட்டேன் என பிடிவாதம் பிடித்துள்ளார்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக- ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. மாதகடப்பா மலை கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தீ விபத்தில் உயிரிழந்தார். இதனால் கிராம மக்கள் அனைவரும் இறுதி சடங்கில் பங்கேற்றனர்.

    அதை தொடர்ந்து ஒரு சிலருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ஆலங்காயம் வட்டார மருத்துவகுழு மூலம் மலை கிராமத்திற்கு சென்று பரிசோதனை செய்தனர். அப்போது கிராமத்தில் இருந்த 74 பேருக்கு பரிசோதனை செய்ததில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அந்த மலை கிராமத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து கிராமத்தில் இருந்து யாரும் வெளியே வர வேண்டாம் என சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் அறிவித்து ஆங்காங்கே தகர ஷீட் அமைத்துள்ளனர். கிராமத்திற்கு வரும் சாலையை மறித்து கொரோனா விழிப்புணர்வு பேனர் கட்டியுள்ளனர்.

    தொற்று பாதிக்கப்பட்ட 24 பேரில் 23 பேரையும் அனுப்பி வைத்த நிலையில், ஒருவர் மட்டும் மருத்துவமனைக்கு வரமாட்டேன் என பிடிவாதம் பிடித்துள்ளார்.

    இதையறிந்த சுகாதாரத்துறையினர் மலை கிராமத்திற்கு சென்று தொற்று பரவல் வேகம் குறித்து விளக்கி, அந்த நபரை தங்களிடம் ஒப்படைத்தால் மருத்துவமனையில் அனுமதிப்பதாக தெரிவித்தனர்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த கிராம மக்கள் ஆலங்காயம் வட்டார மருத்துவ குழுவினரை அவதூறாக பேசி விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×