search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழை தோட்டத்துக்குள் புகுந்த வெள்ளத்தை காணலாம்
    X
    வாழை தோட்டத்துக்குள் புகுந்த வெள்ளத்தை காணலாம்

    கன்னியாகுமரியில் கொட்டித் தீர்த்த கனமழை- வயல்வெளிக்குள் வெள்ளம் புகுந்தது

    கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இரணியலில் 28 செ.மீ. மழை பதிவானது. 2 ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பால் வயல்வெளிக்குள் வெள்ளம் புகுந்தது.
    நாகர்கோவில்:

    தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாகி உள்ளதாகவும், அதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. அதோடு இரவிலும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரணியல் பகுதியில் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. அங்கு ஒரே நாளில் உச்சபச்சமாக 28 செ.மீ. மழை பதிவானது.

    தொடர்ந்து மழை பெய்ததால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் தடுப்பணைக்கு மேல் வெள்ளம் சீறி பாய்வதால் அதன் வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த மழையால் பல்லிக்கூட்டம் பகுதியில் இருந்து வரும் முல்லையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் முல்லையாற்றில் திக்குறிச்சி பகுதியில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. ஆற்றில் வந்த மழை தண்ணீர் அருகில் உள்ள வாழை தோட்டம் மற்றும் பயிர்களுக்குள் புகுந்தது.

    இதனால் திக்குறிச்சி, சிதறால் பகுதிகளில் வயல்களில் ஆற்றுநீர் புகுந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழைகள் மற்றும் நெல் பயிர்கள், காய்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கின.

    இந்தநிலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு வந்த வெள்ள நீர் கடலில் கலக்க முடியாததால், வைக்கல்லூர் பகுதியில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், ஆற்று வெள்ளம் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் பாய்ந்தது.

    விளைநிலத்தில் நின்ற தென்னை மரங்கள் வேரோடு அடித்து செல்லப்பட்டன. வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்களும் நாசமாகியதுடன் ஆற்று வெள்ளத்தில் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டன.

    அரபிக்கடலில் புயல் சின்னம் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டியது.
    Next Story
    ×