search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் தலைமை தபால் நிலையம் மூடப்பட்டுள்ளதை காணலாம்
    X
    நாமக்கல் தலைமை தபால் நிலையம் மூடப்பட்டுள்ளதை காணலாம்

    பணியாளர்களுக்கு கொரோனா தொற்று- நாமக்கல் தலைமை தபால் நிலையம் மூடப்பட்டது

    பணியாளர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக தபால் நிலையம் மூடப்பட்டதால் நேற்று அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் சிறுசேமிப்பு முகவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாமக்கல் நகரிலும் இதன் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மதியம் 12 மணி வரை இயங்கி வருகின்றன.

    இந்தநிலையில் நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றி வரும் 3 பணியாளர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் 3 பேரும் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு நாமக்கல் தலைமை தபால் நிலையம் நேற்று மூடப்பட்டது. நாளையும் (சனிக்கிழமை) திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ரம்ஜான் விடுமுறை, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை என்பதால், வருகிற 17-ந் தேதி தான் தலைமை தபால் நிலையம் மீண்டும் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பணியாளர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக தபால் நிலையம் மூடப்பட்டதால் நேற்று அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் சிறுசேமிப்பு முகவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    Next Story
    ×